அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரயில் விபத்தில் தங்களது சொந்தங்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு காயமடைந்தவர்கள் மீண்டுவரவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஆன்டானியோ குட்ரெசும், இந்த விபத்திற்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இன்று (சனிக்கிழமை) தசர விழா கொண்டாட்டத்தின் போது நேரிட்ட ரயில் விபத்தில், 61 பேர் உயிரிழந்தனர்.

அத்தோடு படுகாயமடைந்த நிலையில் 71 பேர், வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Related News

 • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
 • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
 • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
 • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
 • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
 • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
 • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *