தப்பி ஓடும் வாகனங்களை காவல்துறை துரத்தி பிடிக்காது – புதிய நுட்பம்

ekuruvi-aiya8-X3

instrument_20காவல்துறையின் பிடியில் இருந்து வேகமாக தப்பிச் செல்லும் வாகனங்களை, துரத்தாமல் பிடிப்பதற்கான புதிய நுட்பம் ஒன்றை நடைமுறைப்படுத்த ஒன்ராறியோ மாகாண காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக தப்பிச் செல்லும் வாகனங்கள் மீது ஒட்டும் வகையில் சிறிய ஜீ.பி.எஸ் சாதனங்களை செலுத்தும் பரீட்சார்த்த நடவடிக்கையை ஒன்ராறியோ மாகாண காவல்துறை ஆரம்பித்துள்ளது.

லேசர் கதிரியக்கத்தின் உதவியுடன், சந்தேகத்திற்கு இடமான வாகனம் மீது செலுத்தப்படும் ஜீ.பி.எஸ் கருவி, அந்த வாகனத்தின் இருப்பிடத்தினை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் என்பதுடன், அதன் மூலம் அந்த வாகனத்தினை இலகுவாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மறிக்கும் போது நிறுத்தாமல் செல்லும் வாகனங்கள் மீதும், நிறுத்தியபின் தப்பிச் செல்ல முனையும் வாகனங்கள் மீதும் இந்த கருவி பயன்படுத்தப்படும்.

குறித்த அந்த வாகனத்தில் ஒட்டுப் பசை மூலம் அல்லது காந்த சக்தி மூலம் ஒட்டிக்கொள்ளும் அந்தக் கருவி, அந்த வாகனத்தின் இருப்பிடத்தினை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொடர்ந்து காட்டியவாறு இருக்கும்.

இதன் மூலம் பாதுகாப்பாக அந்த வாகனத்தினை அணுகி கட்டுப்பாடடினுள் கொண்டுவர முடியும் என்று ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வாகனங்களை வேகமாகத் துரத்திச் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு மரணங்களும் சம்பவிக்கும் நிலையில், இந்த அபாயங்களை தவிர்க்க இந்த புதிய தொழில்நுட்பம் உதவும் என்று நம்பப்படுகிறது.

Share This Post

Post Comment