பிரம்டனில் விபத்து : உந்துருளி ஓட்டுனர் படுகாயம்

Thermo-Care-Heating

bromton_19பிரம்டன் Mavis வீதி மற்றும் Steeles Avenue West பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 4.40 அளவில் சிற்றூர்தி ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதாகவும், சுமார் 40 வயது மதிக்கத்தக்க உந்துருளியின் சாரதியே படுகாயமடைந்தாகவும் பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த அந்த நபர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் சணிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்தினை அடுத்து அந்த வீதிச் சந்திப்பு பகுதி ஊடான போக்குவரத்துகளை தடைசெய்த காவல்த்துறையினர், விபத்துத் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ideal-image

Share This Post

Post Comment