லிபரல் கட்சியும் புதிய சனநாயக கட்சியும் ஒன்றிணையுமா?

ekuruvi-aiya8-X3

cathleen_Win1சனநாயக கட்சியுடன் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து, இவ்வளவு முற்கூட்டியே கருத்து கூற முடியாது என ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இவ்வாறான ஒரு கூட்டு ஆட்சிக்கான சாத்தியப்பாடுகள் குறித்து தற்போதைக்கு கருத்து கூற விரும்பவிலலை. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு வகைகளில் ஒருமித்த போக்குகள் காணப்பட்டுள்ள போதிலும், புதிய சனநாயக கட்சியின் வர்த்தக வரிக் கொள்கை ஒன்ராறியோவின் போட்டித் தன்மையை குறைக்கும் வகையில் காணப்படுகின்றது.

இதனால் அந்த கட்சியுடன் அணி சேர்வது குறித்து சிந்திக்கவேண்டி இருக்கின்றது. அத்துடன் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதத்துக்கும் சற்று குறைவான காலப்பகுதி காணப்படுவதனால், இந்த அரசியல் கூட்டணி குறித்து இவ்வளவு முன்கூட்டியே கருத்து கூற முடியாது என கூறினார்.

Share This Post

Post Comment