ட்ரான்ஸ் மவுண்ரன் திட்டம் கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது – பிரதமர்

ekuruvi-aiya8-X3

can_pm30ட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டமானது, கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

ட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாகத் திட்டம் தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் தொடர்ந்து தனது எதிர்பினை வெளியிடாதிருந்தால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு அதுவே காரணம்.அத்துடன் இந்த திட்டம் தொடர்வதற்கு, நிதி மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது என கூறினார்.

அல்பேர்ட்டாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டம், மக்கள் போராட்டங்கள் மற்றும் மாநில அரசின் நெருக்குதல் ஆகியவற்றால் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.

Share This Post

Post Comment