கடன் அட்டை பற்றி மாணவர்களுக்கு அறிவுரை

ekuruvi-aiya8-X3

credit_cardகனடாவில் உள்ள மாணவர்கள் கடன் அட்டைகளில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அதனை நன்றாக படிக்க வேண்டும் என்றும் கடன் அட்டை ஒன்றை தெரிவு செய்ய முன்னர் வருடாந்த கட்டணம் அற்ற அட்டையை தெரிவு செய்யுமாறும் கனடா கடன் தீர்வுகள் மேலதிகாரி தெரிவித்துள்ளார்.

ரொறொன்ரோவில் நிலவும் இலையுதிர் காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடசாலை செல்கின்ற வேளையில் கடன் அட்டை தொல்லைகளினால் தாக்கப்படுவர். கடன் அட்டைகளுக்கு கையொப்பமிடுதல் இளம் மாணவர்களிடையே ஒரு சடங்காக அமைகின்றது.

புதிய மாணவர்கள் நோக்கு நிலை, இரவு ஆய்வு அமர்வுகள், உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கிடையில் இதுவும் இளம் மாணவர்களிடையே ஒரு சடங்காக அமைகின்றது.

ஆனால் நிபுணர்கள் மாணவர்களின் கிரடிட் ஸ்கோர் பாதிக்கப்படுதல் குறித்து எச்சரிக்கின்றனர். இதனால் மோட்கேஜ், வாகன கொள்வனவு போன்றவற்றிற்கான கடன் வழிகளை பாதுகாப்பதில் இழப்புக்கள ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் கடன் அட்டைகளில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அதனை நன்றாக படிக்க வேண்டும் என்றும் கடன் அட்டை ஒன்றை தெரிவு செய்ய முன்னர் வருடாந்த கட்டணம் அற்ற அட்டையை தெரிவு செய்யுமாறும் வேண்டப்படுகின்றனர்.

Share This Post

Post Comment