லிபரல் கட்சித் தலைவராக ஜோன் ஃபிரேய்சர் தேர்வு

ekuruvi-aiya8-X3

John-Fraserஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வியை அடுத்து, லிபரல் கட்சியின் தலைவராக இருந்த கத்தலின் வின் பதவி விலகியுள்ள நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவராக ஜோன் ஃபிரேய்சர் முன்மொழியப்பட்டுள்ளார்.

ஒட்டாவா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜோன் ஃபிரேய்சரை கட்சியின் இடைக்கால தலைவராக நியமிப்பதற்கு, ஏழு உறுப்பினர்களாக குறைவடைந்துள்ள கட்சியின் மத்திய குழு நேற்று இரவு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மத்திய குழு இந்த முடிவினை மேற்கொண்டுள்ள நிலையில், 24 மணி நேரத்தினுள் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னைய நாள் லிபரல் கட்சித் தலைவர் டோல்ட்டன் மக்கியுன்டி(Dalton McGuinty) பதவி விலகியதை அடுத்து, 2013ஆம் ஆண்டில் நடத்தப்ப்டட இடைத்தேர்தலின் மூலம் ஜோன் ஃபிரேய்சர் முதன்முறையாக சட்டமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.

இவ்வாறான நிலையில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த தேர்தலில், பெருமளவான தொகுதிகளை இழந்துள்ள லிபரல் கட்சி, ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி, உத்தியோகபூர்வ கட்சித் தகுதியையும் சட்டமன்றில் இழந்துள்ள நிலையில், இதுவரை கட்சித் தலைவராகவும் ஒன்ராறியோ முதல்வராகவும் பதவி வகித்து வந்த கத்தலின் வின் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

இவ்வாறு கட்சி மிகவும் பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே, கட்சியின் இடைக்காலத் தலைமைப் பதவிக்காக தற்போது ஜோன் ஃபிரேய்சர் முன்மொழியப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment