பயணி மூலமாக கனடாவிற்கு வந்த ஆபத்து

ekuruvi-aiya8-X3

airpot14சுவிட்சர்லாந்தில் இருந்து கனடா ஒன்றாரியோவிற்கு வந்த விமானம் ஒன்றில் பயணித்த பயணிகளுக்கு தட்டம்மை நோய் ஏற்படும் ஆபத்துகள் உள்ளதா என ஒன்றாரியோ சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் குறித்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு தட்டம்மை நோய் காணப்பட்டது என்ற விடயம் உறுதிசெய்யப்பட்ட காரணத்தினாலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விமானத்தில் பயணித்த ஏனைய பயணிகளுக்கும் நோய் தொற்றியுள்ளமைக்கான சாத்தியப்பாடு குறைவு என சுகாதாரத் துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, கனடியர்களுக்கு தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அந்த நோய் பரவும் சாத்தியக்கூறு மிகக் குறைவு. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோர் மூலமாக குறித்த நோய்ப் பரவல் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கும், நோயெதிர்ப்பு சக்தியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டிருக்காது என்பதால் அவ்வாறானவர்களுக்கு குறித்த நோய் தொற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த விமானத்தில் பயணித்த ஏனைய பயணிகளுக்கு நோய் ஆபத்து ஏற்பட்டுள்ளது என தற்போது வரையிலும் பதிவு செய்யப்படவில்லை என ஒன்றாரியோ சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment