பாடசாலை பேருந்தும் காரும் மோதி விபத்து

Thermo-Care-Heating

accident11ரொரன்ரோ Wychwood பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த சிறுவர் ஒருவரும் பெரியவர் ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சில சிறுவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

Davenport வீதி மற்றும் Somerset அவனியூ பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தை அடுத்து Winona Drive இல் இருந்து Oakwood அவனியூ பகுதி வரையில் Davenport வீதியின் இரண்டு வழிப் போக்குவரத்துத் தடங்களும் மூடப்பட்டுள்ளன.

ideal-image

Share This Post

Post Comment