கனடாவிற்கும், நியூசிலாந்துக்கும் பல்வேறு விடயங்களில் ஒருமைப்பாடு

ekuruvi-aiya8-X3

can_r2கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும், நியூசிலாந்தில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ஜசீனா ஆர்டேர்னுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெற்றுவரும் தென்கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரூடோ, அந்த நிகழ்வுகளின் ஒரு பக்க நிகழ்வாக இந்தக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாடுகளின் ஊடகவியலாளர்கள் மத்தியில் இடம்பெற்ற சுருக்கமான ச்நதிப்பின் போது, இருநாடுகளின் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், ஒரு சில விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தமக்கிடையேயான மேலதிக பேச்சுக்களின் போது, வர்த்தக விவகாரங்கள், பருவநிலை மாற்றம், அனைத்துலக அளவில் பெண்ணியம் தொடர்பிலான கொள்கை மேம்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் தாம் மேலும் ஆழமாக ஆலோசிக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதன்போது தெரிவித்துள்ளார்.

அது தவிர இரண்டு நாடுகளுமே பழங்குடியின மக்கள் விடயத்தில் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் நிலையில், இரு தரப்பினரும் பழங்குடியின மக்கள் விவகாரங்களை கையாள்வது தொடர்பில் ஒருவருக்கு ஒருவர் தமது படிப்பினைகளை பகிர்ந்துகொள்ள முடியும் என்று நம்புவதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதன்போது கருத்து வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர், தமது நாடுகளுக்கு இடையே காணப்படும் நலன்கள் சார்ந்த சாவல்களில் மட்டுமின்றி, தம்மிடை தனிப்பட்ட ரீதியிலும் பல ஒருமித்த கருத்துகள் காணப்படுவதனை பிரதமர் ஜஸ்டின் ரூடோ கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் நியூசிலாந்து பிரதமரின் லிபரல் தொழிற்கட்சி வெற்றி பெற்ற நிலையில், கடந்த மாதம் அவர் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment