6 வயது சிறுவனின் திடீர் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

ekuruvi-aiya8-X3

hamilton-policeஹாமில்டன் (Hamilton) பகுதியில் 6 வயது சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் ஹாமில்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை Young and John பகுதியில் 5 மணியளவில் பொலிஸார் சென்றபோது, 6 மாடி கட்டடம் ஒன்றின் தரையில் குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளான்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் மீது சந்தேகம் இல்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த சிறுவன் balcony இல் இருந்து விழுந்துள்ளார் என சந்தேகித்தாலும் அங்கு கதிரையோ அல்லது தளபாடங்களோ இருந்த சான்றும் இல்லை என கூறியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த சிறுவனின் உடலை இன்று (வியாழக்கிழமை) உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

Share This Post

Post Comment