பொதுமன்னிப்பு காலம் முடிந்தும் துப்பாக்கிகளை கையளிக்கும் பொதுமக்கள்

Facebook Cover V02

guns_returnசட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத கால பொதுமன்னிப்பு முடிவந்த நிலையிலும் பொதுமக்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த கலப்பகுதியானது உத்தியோகப்பூர்வமாக முடிவடைந்தாலும் கூட மக்கள் கையளிக்கப்படும் துப்பாக்கிகளை தாம் பெற்று வருவதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை காவல் நிலையங்களுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும், தமக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து அது குறித்து தெரியப்படுத்தினால், அதிகாரிகள் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் அறிவித்துள்ளது.

அதேவேளை கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்படட பொது மன்னிப்பின் போது, 2 ஆயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கிகள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றினை தவிர இந்த பொது மன்னிப்பினை பயன்படுத்தி 1,503 துப்பாக்கிகளை, அவற்றினை வைத்திருந்தோர் தாமாகவே முன்வந்து கையளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment