கனடிய டொலரின் மதிப்பில் சரிவு

Thermo-Care-Heating

canada_dollar1கனடிய டொலர் சிறு சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சந்தையில் ஏற்பட்டுள்ள குழப்பமே இந்த சிறிய சரிவுக்கு காரணம் என்றும், கடந்த வாரம் உலக அளவிலான பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, மசகு எண்ணெயின் விலையிலும், கனடிய டொலரின் பெறுமதியிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி நூறு கனடிய டொலர்கள் 79.40 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியைப் பதிவு செய்துள்ள போதிலும், இந்த நிலைமை நீடிக்காது எனவும், கனடிய டொலர் தொடர்ந்தும் சரிவைக் காணாது என்றும் பொருளியில் அவதானிப்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சிறிது சரிவைப் பதிவு செய்திருந்த கனடிய டொலர், நூறு டொலருக்கு 79.71 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமானத்தில் இருந்து, நூறு டொலர்களுக்கு 81.38 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமானம் வரையில் ஏற்றம் கண்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடஅமெரிக்க நாணய பரிவர்த்தனைச் சந்தை நிபுணர் மார்க் மக்கோர்மிக், இது தொடர்பில் அளித்துள்ள விளக்கத்தில், ஒரு கனடிய டொலரின் பெறுமதி 79 சதம் அமெரிக்க டொலர் என்ற அளவினை விடவும் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும், எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அது 80 இலிருந்து 81 சதங்களாக உயர்வைக் காணும் என்றும் எதிர்வு கூறியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment