வீடற்ற முன்னாள் படை வீரர்களுக்கு நிரந்தர வீடுகள்

ekuruvi-aiya8-X3

mil2வீடற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான புதிய பரீட்சார்த்த திட்டம் ஒன்று மொன்றியல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் முன்னாள் படைவீரர்கள் சங்கம் மற்றும் கனேடிய மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் துணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம், நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு ஒன்றின் போது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வீடற்ற முன்னாள் வீரர்கள் பலரும் உதவி நாடி இங்கு வந்திருக்க மாட்டார்கள் எனவும், ஏனெனில் தாமாகவே தமது தேவைகளை ஏற்பாடு செய்துகொள்ள முடியவில்லை என்பதனை வெளிக்காட்டிக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை என்றும், இந்த திட்டத்தின் செயலாக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, மானிய வாடகையுடனான 16 அடுக்குமாடிக் குடியிருப்புகளை வீடற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அங்கு அவர்களுக்கு உடல் – உள வளச் சிகிச்சைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கனடாவில் இவ்வாறு வீடற்ற படைவீரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதனை, மத்திய அரசினால் ஆய்வு செய்யப்பட்டு கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை வெளிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இவ்வாறு 770 இராணுவ வீரர்கள் வீடுகளற்று வீதிகளில் இருப்பது மத்திய அரசின் முன்னாள் படை வீரர்கள் விவகார அமைச்சின் பதிவுகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமக்கு வீடுகள் இல்லை என்று தாமாகவே முன்வந்து பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையே இவை என்ற அடிப்படையில், உண்மையில் வீடுகளின்றி தெரிவில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இதனை விடவும பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Share This Post

Post Comment