வடகொரியாவின் அணுசக்தி திட்டம் உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஃபிரீலான்ட்

ekuruvi-aiya8-X3

prelandவடகொரியாவின் அணுசக்தி திட்டம் உலகின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை முன்வைப்பதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலான்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச சமுதாயத்துடன் இணங்குவதற்காக வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்கா போன்ற நட்புநாடுகள் அச்சுறுத்தப்படுகையில் கனடா தோள் கொடுத்தது. ஆனாலும் பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.

வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். அந்த வழியில் வடகொரியாவுக்கு சாதகமான முடிவுகள் எதுவும் இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயங்கரமான அச்சுறுத்தலாக விளங்கும் அணுசக்தி சோதனை நடவடிக்கையை வடகொரியா நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share This Post

Post Comment