அமெரிக்கா வர்த்தக விதிகளை மீறுவதாக கனடா குற்றச்சாட்டு

ekuruvi-aiya8-X3

us_canada_flagஅமெரிக்கா சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உலக வர்த்தக நிறுவனத்திடம் கனடா முறைப்பாடு செய்துள்ளது.

ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானியம் மற்றும் குறைந்த விலை விற்பனை போன்றவை தொடர்பில் அமெரிக்கா மேற்கொண்ட விசாரணைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் கனடாவின் இந்த முறைப்பாடு அமைவதாக கூறப்படுகிறது.

கனடா தற்போது அமெரிக்கா மீது வைத்துள்ள 32 பக்கங்களைக் கொண்ட குற்றச்சாட்டில், உலகின் பல நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், 1996ஆம் ஆண்டின் முடிவுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்கா இந்த விசாரணையின் போது கணிப்பீடுகளை முறையற்ற விதத்தில் மேற்கொண்டுள்ளதாகவும், ஏனைய தரப்பினர் தம்மை நியாயப்படுத்துவதற்கான சான்றுகளை அளிப்பதனை அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கனடா தனது குற்றச்சாட்டுகளில் கூறியுள்ளது.

ஆனால் கனடாவின் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளதுடன், இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் அற்றவை என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மரம், பண்ணைப் பொருட்கள், விமான உதிரிப்பாகங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி மற்றும் விற்பனை, NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தை உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் சுமூகமற்ற நிலைமை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment