கனேடிய தேசிய வீரர்கள் நினைவு நாள் இன்று

ekuruvi-aiya8-X3

Rem1கனேடிய தேசிய வீரர்கள் நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. முதலாம் உலகப்போரில் உயிர்தியாகம் செய்த தம்நாட்டு படை வீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

முதலாம் உலகப்போரின் நிறைவாக பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் நவம்பர் 11 ஆம் திகதி காலை 11 மணிக்கு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அதனை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 11 ஆம் திகதி காலை 11 மணிக்கு இந்த நாள் நினைவு கூரப்படும்.

சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் பொப்பிச் செடிகள் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியதாக கூறப்படுகின்றது.

கனடாவில் போர்த் தியாகிகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் அமைகின்றது.

Share This Post

Post Comment