தனியார் புலனாய்வாளர்களுக்காக 18,000 அமெரிக்க டொலர்கள் செலவு

ekuruvi-aiya8-X3

tch11கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், தனியார் புலனாய்வாளர்களுக்காக சுமார் 18,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை ரொறென்ரோ சமுதாய வீட்டுவசதி நிறுவனம் செலவழித்துள்ளது.

இதில், குறிப்பிட தொகை ஊழியர்களின் வரிப் பணத்திற்காகவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக தனியார் புலனாய்வாளர்கள் இருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அத்தோடு அவர்களின் வழக்குகளும் தற்போது நிலுவையில் உள்ளன.

இதேவேளை, ரொறென்ரோவின் ஆய்வாளர்கள் கடந்த டிசம்பர் மாதம், புகார் அளித்ததற்கு பின்னர், ரூபின் தாமிலின்னை தனியார் புலனாய்வாளர்களை கண்காணிப்பதற்காக பொது வீட்டு வசதி நிறுவனத்திம் நியமித்தது.

ரொறென்ரோ சமுதாய வீட்டுவசதி நிறுவனம், வடஅமெரிக்காவில் செயற்படும் இரண்டாவது பாரிய பொது வீட்டுவசதி நிறுவனம் ஆகும்.

இதில், சுமார் 2,100 இற்க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளடங்குகின்றன. சுமார் 110,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தில் 1,600இற்க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

Share This Post

Post Comment