வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணம் குறைகின்றது

credi-cards11வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணத்தை குறைக்க, முன்னணி கடன் அட்டை நிறுவனங்கள் உடன்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை, நிதி அமைச்சர் பில் மொர்னியு, சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு புதிய அமைச்சரான மெரி என்ஜி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள் வருட மொன்றிற்கு கிட்டத்தட்ட 250 மில்லியன் டொலர்கள் வரை சேமிக்க உதவக்கூடிய வகையில், கடன் அட்டை நிறுவனங்கள் தன்னார்வமாக உதவ ஒட்டாவாவுடனான ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து விசா மற்றும் மாஸ்ரகாட் வர்த்தகர்களிடமிருந்து அறவிடும் சராசரி வருடாந்த கட்டணத்தை, 1.5 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாக குறைக்கின்றது

இதன் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்கலாம் எனவும் மேலதிக நிதி சொந்த காரர்கள் முதலீடு செய்ய, விரிவாக்க மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க ஊக்குவிக்க முடியுமெனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Related News

 • கனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்
 • விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
 • சட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு!
 • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
 • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
 • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *