ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு

ekuruvi-aiya8-X3

Canada_attack11கனடாவின் முக்கிய நகரமொன்றின் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்படவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் நேற்று (புதன்கிழமை) முறியடித்துள்ளனர். அத்துடன் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரையும் அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சாத்தியமான ஒரு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து Royal Canadian Mounted Police க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அரொன் டிரைவர் எனப்படும் 23 வயதுடைய சந்தேகநபர் ஒன்ராரியோவின் Strathroy பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வைத்து பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பொலிஸார் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்பொழுது, பலத்த வெடிப்புச்சத்தம், துப்பாக்கிசூடுகள் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கனேடிய புலனாய்வு துறையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தவரெனவும், ஐ.எஸ் பயங்கரவாத குழுவினருக்கு அதரவு வழங்குபவர் எனவும் கூறப்படுகின்றது.

சந்தேக நபர் IED எனப்படும் வெடிக்கும் சாதனங்களை உபயோகித்து மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பொது இடத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது மக்கள் பயப்படும் வகையிலான சூழல் அங்கு இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment