மராத்தான் ஓட்டத்தின் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட எதிர்பார்க்கும் தமிழர்!

suresh_jokimஉலக சமாதான மனிதன் என கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டிக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுரேஸ் ஜோக்கிம் கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தமது சாதனை மரதன் ஓட்டத்தை பெத்லஹேம் நகரில் ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி தமது சாதனை ஓட்டத்தை ரொறன்ரோவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளார்.

இந்த சாதனை ஓட்டத்தின் போது சுரேஸ், உலக சமாதானத்தையும், வறுமையை ஒழிக்கும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் உணர்த்தி வருகிறார்.

அவர் தமது சாதனை பயணத்தில் 6 கண்டங்களில் உள்ள 72 நாடுகளின் 93 நகரங்களுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அவர் 220 நாட்கள் ஓடி முடித்துள்ளதுடன், 2900 கிலோமீட்டர்களை அவர் கடந்துள்ளார்.

இந்தநிலையில் தமது சமாதான மராத்தான் ஓட்டத்தின் போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட சுரேஸ் ஜோக்கிம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இதுவரை 10 ஆயிரத்து 200 டொலர்களை அவர் திரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.


Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *