கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் பதவி விலகினார்

Thermo-Care-Heating

thoo2கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் (Jennifer MacIntyre) பதவி விலகியுள்ளார். தனது கணவரின்திடீர் மரணத்தை தொடர்ந்து இப்பதவியிலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

;கனடாவின் சர்வதேச காலநிலை மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பானது மகத்தானதாகும். ஆனால், தற்போதுள்ள நிலைப்பாட்டில் இப்பதவியில் நீடிப்பது என்பது சாத்தியமற்றதாகும்.

ஆனால், கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான சிறப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெற்றிடமாக காணப்பட்ட கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் பதவிக்கு Jennifer MacIntyre, கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவராக பதவி வகிப்பதற்கு முன்னர் சுவிட்சர்லாந்து மற்றும் லீச்டன்ஸ்டன் நாடுகளுக்கான கனேடிய தூதுவராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment