லண்டன் பயங்கரவாத தாக்குதலில் கனேடிய பெண் ஒருவரும் உயிரிழப்பு

sdsd

London_can_girlலண்டன் பயங்கரவாத தாக்குதலில் கனேடிய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வீடற்றவர்களுக்கான தொண்டு பணிகளில் ஈடுபட்டுவந்த கிறிஸ்ரின் Archibald என்னும் 30 வயதுடைய கனேடிய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை லண்டன் பிரிட்ஜ் மற்றும் அதன் அருகிலுள்ள உணவகங்களிற்குள் நுழைந்த மூன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்கிருந்த பொதுமக்களை வெள்ளை வான் ஒன்றினால் மோதிச் சாய்த்ததுடன் அருகில் இருந்த ஏனையோர் மீது கத்தியால் வெட்டி தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் ஏழு பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மூவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில், பிரித்தானியாவில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment