இறுதிநேர தேர்தல் பரப்புரைகளில் கட்சித் தலைவர்கள்

Facebook Cover V02

leaders_can-0506ஒன்ராறியோ மாநில தேர்தலை ஒட்டி இறுதிநேர தீவிர பரப்புரைகளில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட் இன்று ரொரன்ரொவில் தனது அறிவிப்பினை வெளியிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரொரன்ரோவின் மூன்று பரப்புரை அலுவலகங்களுக்குச் செல்லவுள்ளதுடன், Thornhill வணிக வளாகத்திற்கும் பரப்புரைக்காக செல்கின்றார்.

அதேபோல இன்று ரொரன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பகுதிகளில் பரப்புரைகளை முன்னெடுக்கும் புதிய சனநாயக கட்சித் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், Brampton, Guelph, Kitchener, Cambridge, Brantford, Dundas, Burlington மற்றும் Toronto பகுதிகளுக்குச் சென்று அங்கு தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுளளார்.

லிபரல் கட்சித் தலைவர் கத்தலின் வின் இன்று காலையில் மூன்று நேர்காணல்களில் கலந்து கொள்ளவுள்ளதுடன், ரொரன்ரோவில் தனது அறிவிப்பினை வெளியிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து London மற்றும் Kitchener பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்கின்றார். இந்த தேர்தலில் தமது தோல்வி உறுதியானது என்று அவர் அண்மையில் தெரிவித்துள்ள போதிலும், தனது பரப்புரை நடவடிக்கைகளின் வேகத்தினை கைவிடாது தொடர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment