பிரம்டன் கிழக்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

ekuruvi-aiya8-X3

brompton_05பிரம்டனின் கிழக்கே Gore வீதி மற்றும் Ebenezer வீதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை நான்கு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை பீல் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படு்ததியுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல்த்துறையினர் விரைந்த போது, 38 வயதான ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிராபத்தான நிலையில் காணப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற அந்த இடத்தில்  உந்துருளிகளுடன் சிலர் நின்று கொண்டிருந்ததையும், பின்னர் அங்கு திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையும் சிலர் நேரில் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த நபர் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை அடுத்து குறித்த அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பீல் பிராந்திய காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This Post

Post Comment