நெடுஞ்சாலையில் பாரிய வாகன விபத்து – அறுவர் காயம்

accident_42017கனடா – டொரொன்டோ கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நெடுஞ்சாலை 427 கிழக்கு லேன்களிற்கு அருகில் நள்ளிரவுவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் பயணித்த விமான நிலைய உல்லாச ஊர்தி ஒன்றும் நால்வரை ஏற்றிச்சென்ற காருடன் பின்பக்கமாக இடித்துள்ளது.

நெடுஞ்சாலை 427 மற்றும் கிப்லிங் அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இரு வாகனங்கள் தான் விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதென கருதப்பட்டது.

ஆனால் சாட்சியங்களிடம் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் மூன்றாவது வாகனம் ஒன்றும் சம்பந்தப்பட்டதாகவும் ஆனால் குறித்த வாகனம் இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிராபத்தான நிலையில் காயங்களுடன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அத்தடன் 20 வயதுடைய ஆண் ஒருவரும் 18 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மற்றும் இருவர் சாதாரண காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share This Post

Post Comment