ரொறன்ரோ குடியிருப்பில் தீ: ஒருவர் உயிரிழப்பு

Thermo-Care-Heating

Torn2ரொறன்ரோவின் லோரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டமொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலேயே தீ பரவியுள்ளது. சம்பவத்தையடுத்து, தீயணைப்பு பிரிவினர் கட்டடத்தை சூழ்ந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

அனர்த்தத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் இத்தீ பரவியுள்ளது. இத்தீ பரவலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அனர்த்தத்தை அடுத்து ஏனைய குடியிருப்புகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் இதுவரை குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment