
ரொறொன்ரோ,ஸ்காபுரோ வீடொன்றில் புதன்கிழமை நடு இரவில் மூவர் குத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஸ்காபுரோ மோர்னிங்சைட் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்பேட் அவெனியு மற்றும் நெல்சன் வீதி பகுதியில் நடந்த இக்குத்து சம்பவத்தில் காயமடைந்த மூவரும் சனிபுறூக் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் முதலில் மோசமானதாக நம்பபட்ட போதிலும் பின்னர் உயிராபத்தற்றவை என அறிவிக்கப்பட்டது. பொலிசாரின் விசாரணை தொடர்கின்றது.