ரொரன்டோவிற்கு பயணித்த விமானம் டென்வரில் அவசர தரையிறக்கம்

Thermo-Care-Heating

can_31_2அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து கனடாவின் ரொரன்டோவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க எயார்லைன்ஸ் விமானம், அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தமை குறித்து விமானப் பணியாளர்கள் அறிவித்ததை அடுத்தே, குறித்த விமானம் டென்வர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கென்ட் பவல், “அமெரிக்க எயார்லைன்ஸ் 569 என்ற விமானத்தில் வித்தியாசமான வாசனை உணரப்பட்டதை அடுத்தே, பயணத்தின் நடுவில் குறித்த விமானம் டென்வரில் தரையிறக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

குறித்த விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் பயணித்ததாகவும், இதன்போது யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் அமெரிக்க எயார்லைன்ஸின் மற்றுமொரு விமானம் சிக்காகோ ஓ’ஹரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வேளை புகை வெளியேறியமை காரணமாக விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment