ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் விபத்து – 3 வயது குழந்தை படுகாயம்

sdsd

can_accidentஒன்ராறியோ நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தின்போது 3 வயது குழந்தையொன்று படுகாயமடைந்தமைக்கு அக்குழந்தையின் பெற்றோரே காரணம் என்று பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது முறைப்பாடு பதிவாகலாம் என்று நம்பப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த நெடுஞ்சாலையின் றோஸ் லேன் வீதிக்கு அருகில் உள்ள வீதியில் கார் ஒன்று கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகியது.

இதன்போது குழந்தை சரியான முறையில் அமர்த்தப்படாமலும், அதன் ஆசன பட்டி பிளையான முறையில் உபயோகிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்படுவதுடன், அதன் காரணத்தினாலேயே குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குழந்தையின் பெற்றோர் மீது பொலிஸாரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து சட்டத்தின் படி எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 36 கிலோ கிராமிற்கு குறைவான நிறையைக் கொண்டிருப்பின், கார்களின் பயணம் செய்யும்பொழுது அவர்களுக்கென்று இருக்கும் விஷேட இருக்கையில் அமர்த்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment