2017 இல் கனடாவின் அனைத்துத் தேசியப் பூங்காக்களுக்கும் நுழைவு அனுமதி இலவசம்

Thermo-Care-Heating

can_1_2712_1பிறக்க இருக்கும் புத்தாண்டு முழுவதும் கனடாவின் அனைத்துத் தேசியப் பூங்காக்களுக்கும் மக்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அறிவிப்பை, தேசியப் பூங்கா சேவைகள் அமைப்பு தனது 100ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின் பிரகாரம், அடுத்த ஆண்டு முழுவதும் கட்டணங்கள் எதனையும் செலுத்தாது கனடாவின் 13 மாகாணங்களிலும் உள்ள அனைத்து தேசிய பூங்காக்களுக்கும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த இந்த இலவச நுளைவுக்கான விண்ணப்பத்தினை இணையம் மூலமாக கோருமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இலவச நுளைவு அனுமதியானது, நாட்டின் 171 தேசிய பூங்காக்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் என பல்வேறு இடங்களுக்கும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இவ்வாறான பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஒருவருக்கு சுமார் 10 டொலர்கள் அல்லது ஆண்டுக்கு சுமார் 70 டொலர்கள் என கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பூங்காக்களுக்கான நுளைவுக் கட்டணங்கள் எதிர்வரும் ஒரு ஆண்டுக்கு விலக்களிக்கப் படுகின்ற போதிலும், பூங்காக்களில் தங்குவதற்காக முகாம் அமைக்கும் கட்டணங்கள், உள்ளக சுற்றுலா சேவைகள், வழிகாட்டி சேவைகள் போன்றவற்றுக்கான கட்டணங்களை பயணிகள் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment