ஈரான் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட கனேடிய பேராசிரியர் விடுதலை

Thermo-Care-Heating

can_2709கனடா மற்றும் ஈரானிற்கு இடையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒருமித்த நிலைப்பாடு இல்லாத நிலையில், ஈரான் சிறையில் கடந்த ஜுன் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய – ஈரானிய பிரஜையான Homa Hoodfar வை ஈரான்  விடுதலை செய்துள்ளது.

கடந்த பொதுச்சபை கூட்டத் தொடரின் போது ஓமான் நாட்டு பிரதிநிதிகளுடன், கனடா பிரதமர் மற்றும் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இது சாத்தியமாகியுள்ளது.

இதேவேளை, ஒரு வாரத்திற்கு முன்னர் ஈரானுடன், நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள கனடா முன்வந்த நிலையில், ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பேராசிரியர் Homa Hoodfar யை விடுதலை செய்ய ஈரான் முன்வந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று விடுதலை செய்த ஈரான் அரசாங்கம் இது தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தமது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த ஈரான் அதிகாரிகளுக்கும், குறித்த பேராசிரியரின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஓமான் அதிகாரிகளுக்கும் கனேடிய பிரதமர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment