ஒட்டாவா இளைஞனின் உயிரிழப்பு விவகாரம் – 16 வயது சிறுமி பொலிஸில் சரண்

ekuruvi-aiya8-X3

murder_3008ஒட்டாவாவில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகித்த விவகாரம் தொடர்பில், 16வயது சிறுமி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி அஹ்மட் அஃப்றா என்ற 19வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவே ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து விசாரணைகளை தீவிரப்படுத்திய பொலிஸார், 16வயது சிறுமி, 16வயது சிறுவன் மற்றும் 20வயது இளைஞர் ஆகிய மூவரை இந்த உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தினர். இவர்கள் மூவரையும் கைது செய்வதற்கான நாடு தழுவிய அளவிலான கைது ஆணையையும் பொலிஸார் பிறப்பித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த 16வயது சிறுமி நேற்று (வெள்ளிக்கிழமை) தானாகவே பொலிஸ் நிலையத்திடம் சென்று சரணடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் ஒட்டாவாவைச் சேர்ந்த 29வயது ஆண் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment