பாதங்களை படமெடுத்து பணம் சம்பாதிக்கும் மாடல் அழகி ஜெஸிகா

paadam_26இன்ஸ்டாகிராம் மொடலாக திகழும் கனடாவை சேர்ந்த 32 வயதுள்ள ஜெஸிகா குட் எனும் பெண் தன்னுடைய பாதங்களை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, விற்பனை செய்து ஆண்டுக்கு சுமார் 90,000 டொலரை வருமானமாக ஈட்டுகிறார்.

இதுகுறித்து ஜெஸிகா கூறுகையில், வருமானத்துக்கு இப்படி ஒரு வழி கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை, இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து.

ஓய்வு நேரங்களில் வேலை வாய்ப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருப்பேன், ஒருநாள் பெண் பாதம் மாடல்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டேன்.

பாதங்களுக்கு மொடல்களா என்று வியந்தேன், இதில் நல்ல வருமானம் இருப்பதாக நினைத்தேன். அதனால் என்னுடைய பாதங்களை தொழில்முறை ஒளிப்படக்காரர்களைக் கொண்டு விதவிதமாகப் படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டேன்.

அதன் பின் பல நிறுவனங்களில் இருந்து என் படங்களைக் கேட்டு வந்தனர், நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன். என் கற்பனையால் பாதங்களை வித்தியாசமாக படம் எடுத்து காட்டினேன், தினமும் மூன்று படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன்.

அதை பார்ப்பவர்கள் உடடியாக தொடர்பு கொள்வார்கள், சில படங்களுக்கு அதிக அளவில் போட்டி இருக்கும்.

அப்போது விலையை அதிகமாகச் சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பாத மருத்துவம், காலணி தொடர்பான வியாபாரங்களுக்கு இந்தப் படங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் என்னை 12,000 பேர்கள் பின் தொடர்கிறார்கள். இன்று என்னுடைய ஆண்டு வருமானம் 90,000 டொலர். நானே இவ்வளவு சம்பாதிப்பேன் என்று எதிர்பார்த்ததில்லை, என் வாழ்க்கையே இப்போது மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.


Related News

 • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
 • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
 • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
 • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *