பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ: மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்கள்

ekuruvi-aiya8-X3

kol_2பிரிட்டிஷ் கொலம்பியாவில் அசுர வேகத்தில் பரவிய காட்டுத்தீ தீயணைப்பு படையினரின் கடுமையான முயற்சியினால் தற்போது ஒரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒரு தொகுதியினர் தற்போது தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வரையிலான நிலவரப்படி சுமார் 45,000 பேர் இடம்பெயர்ந்திருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி இன்னமும் இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 வரையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் காட்டுத்தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்டும் எனவும் அதன்பின்னர் காட்டுத்தீயினால் தனது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருந்த போதிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்னமும் 36 இடங்களுக்கான வெளியேற்ற உத்தரவும், 40 இடங்களுக்கான வெளியேற்ற எச்சரிக்கையும் இன்னமும் நடப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment