சிரிய கனேடிய மாணவரிடையே கைகலப்பு – குடிவரவு எதிர்ப்புப் பிரச்சாரங்களும் முன்வைப்பு

Facebook Cover V02

can_sch_2505அல்பேர்ட்டா மாகாணத்திலுள்ள Red Deer  நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் சிரிய மற்றும்கனேடிய மாணவரிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியதை அடுத்து அங்கு குடிவரவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சென்ற வாரம் நான்கு சிரிய மாணவர்களும் நான்கு கனேடிய மாணவர்களும் மோதலில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஒரு வார காலத்திற்குப் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சிரியர்கள் கனேடியர்களைத் தாக்குவதைத் தடுப்பதற்கு எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனக் கண்டனம் தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிரான குழு ஒன்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது RCMP இனர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினருக்கும் பாடசாலைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என பாடசாலையின் அதிபர் கூறினார்.

இக்கைகலப்புச் சம்பவத்தின் ஒளிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டது.  இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஒருவர் கனேடிய மாணவர்கள் தண்டிக்கப்பட்ட அதே அளவிற்கு   சிரிய மாணவர்களுக்குத்  தண்டனை  விதிக்கப்பட  இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Share This Post

Post Comment