வீடற்ற மக்களுக்கு உதவக்கோரி ரொறொன்ரோ மேயரின் குடியிருப்பு முற்றுகை

ekuruvi-aiya8-X3

mayor_houseநகரின் வீடற்ற மக்களுக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஒன்ராறியோ வறுமை எதிர்ப்பு கூட்டணி அங்கத்தவர்கள், ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறியின் குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டுள்ளனர்.

ரொறொன்ரோவிலுள்ள ஆயுத கிடங்குகளை உடனடியாக திறந்து வீடற்றவர்களிற்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்துமாறும், குறைந்தது ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட தங்குமிட அமைப்பை ஏற்பாடு செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த நகர மேயர் தரப்பினர், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 600 படுக்கை வசதிகளை கொண்ட தங்குமிட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆயுத கிடங்குகளை தங்குமிட முகாம்களாக மாற்றுவதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ரொறொன்ரோவில் ஒவ்வொரு 10-நாட்களுக்கு, ஒரு வீடற்றவர் உயிரிழப்பதாக வறுமைக்கெதிரான ஒன்ராறியோ கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

Share This Post

Post Comment