ரொரன்ரோவில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை

sdsd

Tono_Rainரொரன்ரோ நகரம் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகத்தில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையினை அடுத்து, இந்தப் பிராந்தியத்திற்கான வெள்ள எச்சரிக்கை இன்று காலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.30 வரையிலான நிலவரப்படி, 20 இலிருந்து 40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், இன்று பகல் முழுவதும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, ரொரன்ரோ பிராந்திய பாதுகாப்பு அதிகார சபை இந்த வெள்ளக் கண்காணிப்பு எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளது.

இதேவேளை இன்று வெப்பமான வானிலை நிலவும் என்ற போதிலும், இன்றும் நாளையும் மழை பொழிவதற்கான சாத்தியம் 60 சதவீதம் காணப்படுவதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களமும் தெரிவித்துள்ளது.

ரொரன்ரோவில் ஏற்கனவே ஆங்காங்கே வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதுடன், அதனால் வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், தொடரூநது பாதைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சில தொடரூந்து பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பல பயணங்களில் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.

அண்மைய மாதங்களில் ரொரன்ரோவில் பலத்த மழைப் பொழிவு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மற்றம் மே ஆகிய மாதங்களில் மட்டும் 236 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பொழிந்துள்ளதுடன், இது வழக்கமான சராசரி மழைவீழ்ச்சியை விடவும் 60 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment