பாடசாலைகளில் குழப்பத்தை விளைவிக்கும் வரைகுறிப்புகள்

ekuruvi-aiya8-X3

symbols_confusionமார்க்கம் பகுதியில் உள்ள இரண்டு பாடசாலைகளில் குழப்பத்தினை ஏற்படுத்தவல்ல படங்கள் எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தமை குறித்து காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வில்லியம் ஆம்ஸ்ட்ரோங் அரச பாடசாலை மற்றும் மார்க்கம் மாவட்ட மேல்நிலை பாடசாலை ஆகியவற்றில் நேற்றுமுன்தினம் இரவு இந்த வரைகுறிப்புகள் காணப்பட்டதாக யோர்க் பிராந்திய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத விரோதம் ம்றறும் இன விரோதம் சார்ந்த வரைபடங்களே இவ்வாறு காணப்பட்டதாகவும், பாடசாலை சபையினால் இந்த விவகாரம் தெரியப்படுத்தப்பட்டதனை அடுத்து, அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் வில்லியம் ஆம்ஸ்ட்ரோங் பாடசாலையின் விளையாட்டுத் திடலில் இன்னமும் சில வரைகுறிப்புகள் அழிக்கப்படாமல் மீதமாக உள்ளதாகவும், இந்த இரண்டு பாடசாலைகளிலும் இடம்பெற்ற சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா என்பது தெரியவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் தகவல்களைத் திரட்டிவரும் காவல்துறையினர், அந்த வட்டாரத்தில் இருந்து ஏதாவது கண்காணிப்பு ஒளிப்திவுக் கருவி ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியுமா எனவும் முயன்று வருகின்றனர்.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This Post

Post Comment