அல்பேர்ட்டா முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவராக ஜேசன் கென்னி

ekuruvi-aiya8-X3

jesan_kenniஅல்பேர்ட்டா முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவராக முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்கரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைமைத்துவத் தேர்வுக்கான வாக்கெடுப்பில் மொத்தமாக அளிக்கப்பட்ட 1,476 வாக்குகளில், 1,113 வாக்குகளைப் பெற்று அமோக ஆதரவுடன் ஜேசன் கென்னி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தலைமைத்துவப் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்ட நிலையில்,  ஏனைய போட்டியாளரான சட்டமன்ற உறுப்பினர் ரிச்சேர்ட் ஸ்டார்கீ 323 வாக்குகளையும், பெரோன் நெல்சன் 40 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த போதிலும், கட்சியின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இணைந்து இயங்குவதாக போட்டியிட்டு தோல்வி அடைந்த குறித்த இரண்டு போட்டியாளர்களும் அறிவித்துள்ளனர்.

கடந்த நான்கு தசாப்த காலமாக அல்பேர்ட்டா மாநிலத்தில் முற்போக்கு பழமைவாதக் கட்சியே ஆட்சியில் இருந்து வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தது.

தற்போது  அல்பேர்ட்டா மாநிலம் புதிய சனநாயகக் கட்சியின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இநத நிலையிலேயே கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கான இந்த தோவு இடம்பெற்று தலைவராக  ஜேசன் கென்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share This Post

Post Comment