காட்டுத்தீயினால் வெளியேறிய மக்களை மீள குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

ekuruvi-aiya8-X3

meel_2பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவிவந்த காட்டுத்தீ தற்போது சற்று தணிந்துள்ளநிலையில், பாதுகாப்பான இடங்கள் என கருதும் இடங்களுக்கு மக்களை திருப்பி அனுப்பும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

தீயினால் அழிவடைந்து போயுள்ள வீடுகளை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்கும் கடினமான பணியினை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், எரிந்துபோயுள்ள வீடுகள் கட்டடங்கள் போன்றவற்றின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பிய மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓரளவுக்கு தெளிவான தரவுகள் சேகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, அதன் உரிமையாளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, அழிவடைந்த வீடுகளட குறித்த தகவல்களை அவர்களுக்கு வழங்கமுடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடியிருப்புகளுக்கான மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை மீள ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக இதுவரை 40,000ற்றும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் 17,000 மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment