மின் கம்பத்தில் கார் மோதி விபத்து – வாகன சாரதியை காணவில்லை

ekuruvi-aiya8-X3

Morningside-1902மோர்னிங்சைட் பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்றில் கார் ஒன்று மோதுண்டு மிக மோசமாக சேதமடைந்துள்ள நிலையில், அதன் சாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

எல்ஸ்மெயர் வீதி மற்றும் நெய்ல்சன் வீதிப் பகுதியில் நேற்றுக் காலை எட்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில் அந்த வாகனத்தின் சாரதியை அங்கு காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அந்த வாகனம் மிகவும் மோசமாக சேதமடைந்திருந்ததாகவும் கூறப்படும் நிலையில், வாகனத்தின் சாரதியை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், காவல்துறையினர் ஈடுபட்டிருந்ததாகவும், இந்த நடவடிக்கையில் மோப்பநாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் குறித்த அந்த சாரதி கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment