கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பூர்வகுடி இனத் தலைவர்களுடன் சந்திப்பு

Harjit_sajjan_27தமது ஒப்பந்தம், சூழல் மற்றும் ஏனைய உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இராணுவத்தை நேரடியாக அழைக்கும் உரிமை வேண்டும் என்ற பூர்வகுடியினரின் கோரிக்கையை, கனேடிய பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan  மீள்பரிசீலனை செய்வதாக அறியவந்துள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உள்ளூர் அமைதிகாப்பு மற்றும் ஏனய நெருக்கடி நிலைமைகளின் போது, மாகாண அரசாங்களுக்கு இராணுவத்தை போராட அழைக்கும் அதிகாரம் உள்ளதைப்போல, பூர்வகுடி சமூகத்தினருக்கும் வேண்டும் என, பூர்வகுடி மக்களின் காங்கிரஸ் உப-தலைவர் Ron Swain பாதுகாப்பு அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

கனடாவின் பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகவே இக்கூட்டம் வினிபெக் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூர்வகுடியினர் தொடர்பான விடயங்களே முக்கியத்துவம் வகித்தன.

பூர்வகுடியினருக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் (reserve) வசிக்காத மூத்த குடியினர் மற்றும் மெற்றிஸ் (First Nations and Metis) இனத்தவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் Ron Swain, 1990 ஆம் ஆண்டு Mohawk  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமான மோதல்களின் போது, கியூபெக் அரசு அமைதியை நிலைநாட்ட இராணுவத்தை அழைத்தமையை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலைமகளில் பூர்வகுடி மக்களும் தங்களது பாதுகாப்பிற்காக இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.

பூர்வீக குடியினர் பெரும்பாலாக அங்கம் வகிக்கும் Canadian Rangers என்ற வட பகுதிப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் படையணியின் நவீனமயமாக்கல் தொடர்பாகவும், கனேடிய இராணுவத்தில் பூர்வீக குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பது தொடர்பாகவும் அமைச்சர் பேச்சு வார்த்தை நடாத்தினார்.


Related News

 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
 • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
 • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
 • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
 • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *