சிறுவர் பராமரிப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு உதவி

Thermo-Care-Heating

students18சிறுவர் பராமரிப்புத் திட்டங்களுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கத்துக்கு 435 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் உயர்தரமுள்ள, அங்கீகாரம் பெறப்பட்ட சிறுவர் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடம் இருந்து ஒன்ராறியோ சுமார் நூறு மில்லியன் டொலர்களை பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவை தவிர 40 மில்லியன் டொலர்கள் ஒன்ராறியோவின் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத் திட்டங்களுக்காகவும், ஐந்து மில்லியன் டொலர்கள் சிறுவர் ஆரம்ப கல்வி பயிற்சித் திட்டத்திற்காகவும் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் மேலும் ஒரு இலட்சம் அங்கீகாரம் பெற்ற சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைக்கும் திட்டத்தினை ஒன்ராறியோ மாநில அரசாங்கம் கொண்டுள்ள நிலையில், மத்திய அரசாங்கத்தின் இந்த நிதி மூலம் மேலும் சுமார் 11,200 அங்கீகாரம் பெற்ற சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment