சர்ச்சையில் சிக்கிய எயார் கனடா நிறுவனம்

ekuruvi-aiya8-X3

air-canada-1805எயார் கனடா நிறுவனத்தின் விமான டிக்கட் பதிவு செய்யும் இணையதளத்தில், தாய்வானின் தலைநகர் தாய்பேவை, சீனாவின் ஓர் பகுதியாக வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தாய்வானின் வெளிவிவகார அமைச்சு, எயார் கனடா விமான சேவைக்கு அதிகாரபூர்வமாக இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் பிழையானது எனவும் உடனடியாக இந்த தகவல் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலம் வரையில் சீனாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், திடீரென இவ்வாறு சீனாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கும் தாய்வானுக்கும் இடையில் கடுமையான முரண்பாடு நிலைமை நீடித்து வருகின்ற நிலையில், எயார் கனடா நிறுவனத்தின் இந்த செயற்பாடு பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Share This Post

Post Comment