போலி கடன் அட்டைகளின் மூலம் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Facebook Cover V02

duplicate_card_ladyபோலி கடன் அட்டைகளின் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர், எஜெக்ஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

25 வயதான நிரூபா ஜெகதீஸ்வரன் என்ற குறித்த பெண்ணே ரொறொன்ரோ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து 42 போலி கடன் அட்டைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

வங்கித் தகவல்களை திருடி, அவற்றின் மூலம் போலி கடன் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான மோசடி செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொறொன்ரோ இடைத்தங்கல் ஆணையத்தில் டோக்கன்களைப் பெற்றுக்கொள்வதற்காக, போலி கடன் அட்டைகளை குறித்த பெண் பயன்படுத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுததே இவர் கைது செய்யப்பட்டார்.

Share This Post

Post Comment