பத்தாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் துண்டிப்பு

ekuruvi-aiya8-X3

toronto17ரொறன்ரோவில் இன்னமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக, ரொறன்ரோ ஹைட்ரோ வண் மின்சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரொறன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நிலவும் கடுமையான உறைபனி மழை மற்றும், பலத்த காற்றுடன் கூடிய வானிலையால் ஆயிரக்கணக்கானோருக்கான மின் விநியோகம் இன்னமும் தடைபட்டுள்ளது.

இந்நிலைமை மோசமாக இருந்த வேளையில் சுமார் 44,000 பேர் வரையில் மின் வினியோகம் இன்றி இருந்ததாகவும், தற்போது படிப்படியாக நிலைமை சீர் செய்யப்பட்டு வருவதாகவும் ரொறன்ரோ ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment