மாலிக்கு செல்லும் கனடிய படைகள்

ekuruvi-aiya8-X3

maal1கனடியப் படை வீரர்கள் மோதல்கள் இடம்பெற்று வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு தொகுதி படை வீரர்கள் மாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாலிக்கு அனுப்பி வைக்கப்படும் இந்த கனடிய படை வீரர்கள் அங்கு 12 மாதங்களுக்கு தங்கிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் எனவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வன்கூவரில் இடம்பெற்ற அமைதிகாப்பு மாநாட்டின்போது, பலம் வாய்ந்த 200 படை வீரர்களையும், ஆறு உலங்குவானூர்திகளையும், இரண்டு போக்குவரத்து விமானங்களையும், அவற்றுக்கான விமானிகள் மற்றும் துணைப் பணியாளர்களையும் ஐ.நா அமைதிப்படைக்கு வழங்குவதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்திருந்தார்.

அதனை நிறைவேற்றும் ஒரு பகுதியாகவே, மாலிக்கான இந்த படையினர் அனுப்பப்படும் நிகழ்வு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கனடிய வீரர்கள் மாலிக்கு அனுப்பி வைக்கப்படுகையில், 1990ஆம் ஆண்டின் பின்னர், ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படையணியில் கனேடியப் படைகள் கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

1900ஆம் ஆண்டிற்கு முன்னர் சோமாலியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் கனேடிய படைகள் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment