புற்றுநோய் பாதித்த ஐந்து வயது சிறுமி மேல் கார் மோதி விபத்து

Facebook Cover V02

kameelaகனடாவில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நாட்டின் டொராண்டோவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, கமீலா டி அல்மிய்டா (5) என்ற சிறுமி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு பள்ளியை விட்டு வெளியில் வந்துள்ளார்.

கமீலாவை அழைத்து செல்ல அவர் தந்தை காரில் வந்துள்ளார், தந்தையின் காரை நோக்கி கமீலா வந்து கொண்டிருந்த போது பின் பக்கத்திலிருந்து வேகமாக வந்த இன்னொரு கார் கமீலா மீது மோதியுள்ளது.

இதில் இரண்டு கார்களுக்கு இடையில் சிக்கிய கமீலா படுகாயமடைந்தார், உடனடியாக அருகிலிருந்தவர்கள் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் கமீலாவின் தந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

கமீலா மீது மோதிய காரில் யாருமே இல்லை என தெரியவந்துள்ளது, கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இப்படி நடந்ததா அல்லது ஓட்டுனர் ஏதாவது தவறு செய்து விட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

கமீலாவின் மரணம் அவர் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, குடும்ப நண்பர் அனா பவுலா கூறுகையில்,

மூன்று வயதில் கமீலாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தொடர் சிகிச்சையால் அதிலிருந்து அவர் மெல்ல மீண்டு வந்த நிலையில் இப்படியொரு சோக சம்பவம் நடந்துவிட்டது.

கமீலாவின் பெற்றோர் படும் வலியை வார்த்தைகளால் கூற முடியாது என தெரிவித்தார்.

Share This Post

Post Comment