ரொறன்ரோவில் எட்டு தசாப்தங்கள் காணாத மிகக் குறைவான வெப்பம் பதிவு

ekuruvi-aiya8-X3

kil2கடந்த எட்டு தசாப்தங்கள் காணாத மிகக் குறைவான வெப்பம் ரொறன்ரோவில் பதிவாகியுள்ளது.

79 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 10ஆம் திகதி, ரொறன்ரோ பியர்சன் விமான நிலையப் பகுதியில் உறைநிலைக்கு கீழே பத்து பாகை செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும், இதற்கு முன்னதாக 1938ஆம் ஆண்டிலேயே இதனை விட சற்று குறைவாக உறைநிலைக்கு கீழே 8.9 பாகை வெப்பநிலை பதிவானதாகவும் கூறப்படுகிறது.

வெப்பநிலை சுழியத்துக்கு கீழே பத்து பாகையாக காணப்பட்ட போதிலும், காற்றுடன் சேர்ந்த அது 15 பாகை அல்லது அதற்கும் குறைவாக உணரப்படக்கூடும் எனவும் வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment